M.K.Stalin Profile Banner
M.K.Stalin Profile
M.K.Stalin

@mkstalin

Followers
2,832,651
Following
88
Media
3,314
Statuses
6,108

Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock

Joined October 2013
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@mkstalin
M.K.Stalin
3 months ago
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரைப் போன்றது தி.மு.க. ஆட்சி என்று வரலாறு சொல்லும் அளவிற்கு செயல்படுவோம்! #100DaysOfDMKGovt-க்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி! வாழ்த்த மனமில்லாதவர்களின் வாழ்த்தையும் பெறும் வகையில் இரு மடங்காக உழைப்போம்.
4K
4K
15K
@mkstalin
M.K.Stalin
2 hours ago
இப்பெருமழையிலும் கடைக்கோடியில் உள்ள ஒருவர் கூட உணவுக்குச் சிரமப்படவில்லை என்று வரும் செய்திதான், நம் கழகச் செயல்வீரர்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள மனிதநேயக் கடமைக்கான அங்கீகாரம் ஆகும். கழகத்தினர் அக்கடமையை ஆற்றி மக்களைக் காத்திட வேண்டுகிறேன்.
Tweet media one
101
454
2K
@mkstalin
M.K.Stalin
3 hours ago
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிட்டு; கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கி, பாதுகாப்போடு இருக்குமாறு வேண்டினேன். வரலாற்றில் அரிதான பெருமழையின் பாதிப்புகளிலிருந்து விரைவில் உறுதியோடு மீள்வோம்; மீட்டெடுப்போம்!
80
480
2K
@mkstalin
M.K.Stalin
6 hours ago
சென்னை மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, மாரத்தான் வீரராகத் தன்னை நிரூபித்த @Subramanian_ma அவர்கள், தற்போது மாண்புமிகு மருத்துவத்துறை அமைச்சராகவும் தன் ஆற்றலை நிரூபித்துப் பெற்றிருக்கும் Outstanding Response To Covid19 எனும் உலகளாவிய அங்கீகாரத்துக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
@Subramanian_ma
Subramanian.Ma
a day ago
லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள HOUSE OF COMMONS அரங்கில் நேற்று நமக்கு வழங்கப்பட்ட "விருதை" எனது மகன் மருத்துவர் சு.இளஞ்செழியன் @msilan1984 மருமகள் மருத்துவர் கிரீத்தா இளஞ்செழியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் @HouseofCommons #masubramanian #TNhealthminister #award #London
91
707
3K
@mkstalin
M.K.Stalin
22 hours ago
அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்!
65
592
3K
@mkstalin
M.K.Stalin
22 hours ago
நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது!
42
439
2K
@mkstalin
M.K.Stalin
22 hours ago
சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு;
Tweet media one
Tweet media two
Tweet media three
178
1K
6K
@mkstalin
M.K.Stalin
a day ago
சென்னையில் வழக்கத்தைக் காட்டிலும் மிக அதிக அளவில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பட்டாளம், புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டிமெலோஸ் சாலை பகுதிகளில் நேரில் ஆய்வுசெய்து, தேங்கியுள்ள நீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளை அறிவுறுத்தினேன்.
100
641
3K
@mkstalin
M.K.Stalin
a day ago
தமிழக மக்கள், கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவினை, மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற விரைந்து அனுப்புமாறு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
125
849
3K
@mkstalin
M.K.Stalin
2 days ago
மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களின் அயராத முயற்சியால் சென்னையின் பல முக்கியப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்காமல் தவிர்க்கப்பட்டதுடன்; தேங்கிய பகுதிகளிலும் உடனே சரிசெய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பகுதிகளில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு அவர்களை ஊக்கப்படுத்தினேன்.
194
869
4K
@mkstalin
M.K.Stalin
2 days ago
#Connect2021 கருத்தரங்கில் கலந்துகொண்டு #1TrillionUSD எனும் தமிழ்நாடு அரசின் கனவுமெய்ப்பட, தகவல் தொழில்நுட்பத் துறை ஆற்றவேண்டிய பங்களிப்புகள் குறித்துப் பேசினேன். தமிழ்நாடு தரவு மையக் கொள்கையினை வெளியிட்டு, உலக அளவில் IT துறையின் முக்கிய மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற உறுதியளித்தேன்.
92
637
2K
@mkstalin
M.K.Stalin
2 days ago
சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, கருத்து சுதந்திரம் முதலிய உயரிய கோட்பாடுகள் பக்கத்துக்குப் பக்கம் மிளிர்வதாக வடிக்கப்பட்டதுதான் நமது இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்டம் ஆகும். அதன் முகவுரையை குடிமக்களும் ஆட்சியாளர்களும் பொன்போல் போற்றிப் பாதுகாப்போம்! #ConstitutionDay
Tweet media one
Tweet media two
85
657
2K
@mkstalin
M.K.Stalin
2 days ago
முதல்வராக அல்ல... தந்தையாக! #InternationalDayForEliminationOfViolenceAgainstWomen
340
2K
7K
@mkstalin
M.K.Stalin
3 days ago
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், பல்வேறு சமூகப்பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ஒரு இலட்சம் பேர் புதிதாகக் கண்டறியப்பட்டு; அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான அடையாளமாக 10 பயனாளிகளுக்கு இன்று ஆணைகளை வழங்கினேன்.
Tweet media one
154
665
3K
@mkstalin
M.K.Stalin
3 days ago
Wrote to Hon'ble @JM_Scindia on the hardship faced by the Permanent Residents of Singapore, Malaysia and other travellers from TN due to non-availability of direct flight services and requested him to make temporary 'Air Transport Bubbles' agreement with Singapore and Malaysia.
Tweet media one
Tweet media two
71
525
2K
M.K.Stalin Retweeted
@CMOTamilnadu
CMOTamilNadu
4 days ago
காவல் பணியின் போது வீரமரணம் அடைந்த திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பூமிநாதன் அவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார்
115
507
2K
@mkstalin
M.K.Stalin
4 days ago
பாதிப்புகளை ஆய்வுசெய்த ஒன்றிய அரசுக் குழுவினரிடம் மாநிலத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இடைக்கால நிதி வழங்கக் கோரிக்கைகளை முன்வைத்தேன்.
Tweet media one
56
337
944
@mkstalin
M.K.Stalin
4 days ago
#NorthEastMonsoon வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்ய எடுக்கப்பட்டுவரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள், இனி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமையேற்று வழிகாட்டுதல்களை வழங்கினேன்.
Tweet media one
121
599
3K
@mkstalin
M.K.Stalin
4 days ago
தடையில்லா - சீரான மின்சாரம் வழங்கவும்; மின் இழப்பு மற்றும் பராமரிப்புச் செலவினங்களையும் குறைக்கவும் ரூ.517 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்கள் மற்றும் ரூ.141 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 40 திறன் மின்மாற்றிகளின் செயல்பாட்டினைத் தொடங்கிவைத்தேன்.
Tweet media one
175
703
3K