M.K.Stalin Profile Banner
M.K.Stalin Profile
M.K.Stalin

@mkstalin

Followers
2,856,839
Following
88
Media
3,337
Statuses
6,136

Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock

Joined October 2013
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@mkstalin
M.K.Stalin
3 months ago
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரைப் போன்றது தி.மு.க. ஆட்சி என்று வரலாறு சொல்லும் அளவிற்கு செயல்படுவோம்! #100DaysOfDMKGovt-க்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி! வாழ்த்த மனமில்லாதவர்களின் வாழ்த்தையும் பெறும் வகையில் இரு மடங்காக உழைப்போம்.
4K
4K
15K
@mkstalin
M.K.Stalin
a day ago
சென்னையின் முக்கிய நீராதாரமான போரூர் ஏரியின் கலங்கல் மற்றும் மாங்காடு உபரிநீர் வாய்க்கால் பகுதிகளைப் பார்வையிட்டு நீர்வரத்து குறித்து ஆய்வு செய்தேன். மேலும் அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி, போர்க்கால வேகத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.
168
815
3K
@mkstalin
M.K.Stalin
a day ago
Pained to hear about the passing away of Former Chief Minister of Andhra Pradesh and Former Governor of Tamil Nadu Dr. Konijeti Rosaiah, a man of vast experience, knowledge and a veteran statesman. I offer my deepest condolences to his family and friends in this hour of grief.
117
594
4K
@mkstalin
M.K.Stalin
2 days ago
"இம்முறை ஏற்பட்ட பாதிப்புகள் அடுத்து நடக்காமல் தடுத்து; நிரந்தரத் தீர்வு காண சென்னையின் ஒவ்வொரு பகுதிவாரியாக, துல்லியமான, நடைமுறைச் சாத்தியம் உள்ள திட்ட அறிக்கையை விரைந்து தாருங்கள்” எனச் சென்னை வெள்ள இடர் தணிப்புக் குழுவின் முதல் கூட்டத்தில் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டேன்.
147
866
3K
@mkstalin
M.K.Stalin
2 days ago
மாநில உரிமைகளைப் பறிக்கும் #DamSafetyBill-ஐ தேர்வுக்குழுவுக்கு அனுப்புக என்ற திமுக-வின் கோரிக்கையை, பிற எதிர்க்கட்சிகள் ஆதரித்தபோதும், மாநில மக்கள் அளித்த பெரும்பான்மையைக் கொண்டு அவர்களுக்கு எதிராகவே செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.
Tweet media one
158
1K
3K
@mkstalin
M.K.Stalin
2 days ago
சமத்துவத்தை நோக்கிய, எந்த வேற்றுமையும் இல்லாத நமது பயணத்தில் புத்தொளியைப் பாய்ச்சிடுவோம்; மாற்றுத்திறனாளிகள் அணுகுவதற்கு எளிமையான பொதுக் கட்டமைப்புகளை வடிவமைப்போம்; அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்டி அவர்களின் சுயமரியாதையை உறுதிசெய்வோம்! #WorldDifferentlyAbledDay
25
244
678
@mkstalin
M.K.Stalin
2 days ago
எண்ணங்களில்தான் குறைபாடுகள் கூடாதே தவிர; உடலளவிலான குறைபாடுகள் குறையே அல்ல! அதற்குச் சான்றாகவும் பிறர்க்கு ஊக்கமாகவும் பலர் விளங்குகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மேல் நேசம் கொண்டு திட்டங்கள் பல கொண்டு வந்த தலைவர் கலைஞர் அடியொற்றிப் பயணிக்கும் அரசு இது! #WorldDifferentlyAbledDay
31
265
725
@mkstalin
M.K.Stalin
2 days ago
#WorldDifferentlyAbledDay-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளைத் திறந்து வைத்து, விருதுகள் மற்றும் பணி ஆணைகளை வழங்கினேன். கலைஞர் வழிநின்று எளியோருக்குத் தொண்டாற்றுவதே எனது பணி என்பதில் மகிழ்கிறேன். உங்களுக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
109
655
2K
@mkstalin
M.K.Stalin
3 days ago
வழக்கத்தைவிட இருமடங்கு கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களை நடந்தே சென்று பார்வையிட்டேன்; மக்களின் குறைகளை நேரில் கேட்டு உடனே தீர்வுகாண உத்தரவிட்டேன். ஓடிவந்து பணியாற்றிட தயாராக உள்ள திமுக அரசு மக்களை நிச்சயம் காக்கும்! அவர்களுக்கு துணைநிற்கும்!
234
1K
4K
@mkstalin
M.K.Stalin
3 days ago
சமூகநீதிப் போர்க்களத்தில் என்றும் இளைஞராய், எங்கள் அனைவரையும் முனைப்புடன் முன்னின்று வழிநடத்தும் வெற்றிவீரராம் @AsiriyarKV அய்யா அவர்களின் வாழ்வும் தொண்டும் நூறாண்டுகள் கடந்தும் தொடர வேண்டும் என அவரது 89-ஆவது பிறந்தநாளில் நேரில் சந்தித்து நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தேன்.
Tweet media one
Tweet media two
128
881
4K
@mkstalin
M.K.Stalin
4 days ago
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து நேரடியாக பக்கிங்காம் கால்வாய்க்கு மழைநீர் வடிகால் பணி, மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலையில் 70மீ அகல உயர்மட்டப் பாலப் பணிகளை ஆய்வுசெய்து, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் நிவாரண உதவி வழங்கினேன். மழைநீர் தேங்காமல் மாற்றிக்காட்டும் இந்த அரசு!
127
656
2K
@mkstalin
M.K.Stalin
4 days ago
அலர்மேல்மங்காபுரம் மக்கள் நேற்று என்னிடம் தெரிவித்த குறைகள்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். அடுத்த 10 நிமிடத்தில் குடிநீர், பால், உணவு ஆகியவை வழங்கப்பட்டதாகவும்; வெள்ளநீரும் அகற்றப்பட்டதாகவும் இன்று நான் நேரில் சந்தித்தபோது தெரிவித்து மகிழ்ந்தார்கள்.
181
980
4K
@mkstalin
M.K.Stalin
4 days ago
தொழிலாளர் நலத்துறை சார்பில், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 50,721 பேருக்குக் கல்வி, ஓய்வூதியம், திருமணம், மகப்பேறு உள்ளிட்டவற்றுக்கான உதவித்தொகைகள் வழங்கும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு வழங்கினேன். மேலும், அரசினர் #ITI-களில் புதிய கட்டடங்களைத் திறந்துவைத்தேன்.
Tweet media one
Tweet media two
75
554
2K
@mkstalin
M.K.Stalin
4 days ago
ஒட்டன்சத்திரம் அ/மி பழனியாண்டவர் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி, விளாத்திக்குளம் அ/மி சுப்பிரமணிய சுவாமி கலை & அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு அ/மி அர்த்தநாரீசுவரர் கலை & அறிவியல் கல்லூரி ஆகிய 3 புதிய @tnhrcedept கல்லூரிகளைத் தொடங்கிவைத்தேன். இதனால் கிராமப்புற மாணவர்கள் பயனடைவர்.
Tweet media one
88
651
3K
@mkstalin
M.K.Stalin
4 days ago
#WorldAIDSDay ஆன இந்நாளில், தமிழ்நாட்டில் #HIV தொற்று இல்லா நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்! தொற்றுடன் வாழ்பவரை ஒதுக்காமல், நம்மில் ஒருவராக அன்பால் அரவணைத்து; ஆதரவுக்கரம் நீட்டி வாழ வைப்போம் எனக் கேட்டுக்கொள்கிறேன். End Inequalities. End AIDS. End Pandemics.
Tweet media one
59
642
2K
@mkstalin
M.K.Stalin
5 days ago
ஒவ்வொரு நாளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவதைக் கடமையாக மட்டும் கருதாமல்; மக்களின் துன்பத்தில் பங்கெடுத்து, அவர்களுடன் அரசு துணைநிற்கிறது என உணர்த்தவும், அவர்களது குறைகளைக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும் என்ற உள்ளார்ந்த அன்போடும்தான் செய்துவருகிறேன்.
97
319
860
@mkstalin
M.K.Stalin
5 days ago
செம்மஞ்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வுசெய்து, மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை வழங்கினேன். மேலும், செங்கல்பட்டு - குட்வில் நகர் மக்கள் நேற்று என்னிடம் தெரிவித்திருந்த புகார் சீர்செய்யப்பட்டதா என்பதைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு உறுதிசெய்துகொண்டேன்.
137
652
2K
@mkstalin
M.K.Stalin
5 days ago
ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் எய்திய வீரர்கள் கே.ஏகாம்பரம், கே.கருப்பசாமி, பி.பழனிகுமார் ஆகியோரது வாரிசுதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 20 இலட்சமும்; பனிச்சறுக்கு மூலம் 'லடாக் - மலரி' சென்று சாதனை படைத்த கேப்டன் குபேர காந்திராஜ் அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
72
644
3K
@mkstalin
M.K.Stalin
5 days ago
பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மெட்ரோ பயணிகள் இரயில் நிலையத்திலிருந்து தங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று வருவதை எளிதாக்கவும் 12 இணைப்புச் சிற்றுந்துகளின் இயக்கத்தைத் தொடங்கிவைத்தேன். இதேபோல் எல்லா மெட்ரோ நிலையங்களிலிருந்தும் சிற்றுந்துகள் இயக்கப்படும்.
92
687
3K